ஒலிபெருக்கி விவகாரத்தில் ராஜ்தாக்கரேக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காது- ராம்தாஸ் அத்வாலே பேட்டி


மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே
x
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே
தினத்தந்தி 5 May 2022 6:51 PM IST (Updated: 5 May 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

மசூதி ஒலிபெருக்கி விவகாரத்தில், ராஜ் தாக்கரேக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காது என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

சோலாப்பூர், 
  மசூதி ஒலிபெருக்கி விவகாரத்தில், ராஜ்தாக்கரேக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காது என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார். 
  மசூதி ஒலிபெருக்கி விவகாரத்தில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயை இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே சாடியுள்ளார்.
  இதுகுறித்து அவர் நேற்று சோலாப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் ஆதாயம் கிடைக்காது
  சிவசேனா கட்சியில் இருந்து விலகியபோது ராஜ் தாக்கரே, அவர் உருவாக்கிய கட்சிக்கொடியில் நீலம், வெள்ளை, பச்சை மற்றும் காவி வண்ணத்தை புகுத்தினார். 
  ஆனால், தற்போது அவர் காவி நிறத்தை வைத்துக்கொண்டு சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். காவி நிறம் என்பது சர்ச்சைக்கான நிறம் இல்லை. அது அமைதியை நிலைநாட்டும் நிறம்.
  ராஜ்தாக்கரே இந்த கடினமான நிலைப்பாட்டில் இருந்து எந்த விதமான அரசியல் ஆதாயமும் பெறமாட்டார். அவர் ஏற்கனவே பல்வேறு நிலைப்பாட்டை எடுத்தபோது, ஒருபோதும் ஆதாயத்தை பெறவில்லை. எனவே சமூகத்தில் அவர் பிளவை ஏற்படுத்த வேண்டாம். 
பால்தாக்கரேயின் நகலா?
  ராஜ்தாக்கரே பால்தாக்கரேயின் நகலா? என்று கேட்கிறீர்கள். ஆனால் பால்தாக்கரே வித்தியாசமான தலைவர். ராஜ்தாக்கரே குற்றம் சாட்டுவது போல, சரத்பவார் சாதிய தலைவர் அல்ல. ஆனால், அவரது கட்சியில் சாதிய தலைவர்கள் இருக்கிறார்கள்.
  இவ்வாறு அவர் கூறினார். 

Next Story