மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்
வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி ரூ.96 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி ரூ.96 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ரூ.96 லட்சம்
கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் முருகன்(வயது 47). நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்தவர் பண்டரிநாதன்(65). இவர், முருகனிடம் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறினார். இதனை நம்பிய முருகன் 2 கிலோ தங்கம் வாங்குவதற்காக ரூ.96 லட்சத்துடன் கருப்பம்புலத்திற்கு வந்தார்.
அப்போது பண்டரிநாதன், 850 கிராம் எடை கொண்ட தங்கத்தை முருகனிடம் கொடுத்து விட்டு மீதம் உள்ள நகைகளை பின்னர் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் எனக்கூறி அனுப்பி விட்டார். இதனால் முருகன் தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகையை கொடுத்துவிட்டு தனியாக சென்றார்.
மேலும் 2 சொகுசுகார்கள் பறிமுதல்
இதனை அறிந்த பண்டரிநாதன் தனது ஆட்களை அனுப்பி முருகனை மிரட்டி அவரை தாக்கி அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் முருகன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.
மேலும் கைதானவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த மோசடிக்கு பயன்படு்த்திய மேலும் 2 சொகுசுகார்களை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடிவருகி்ன்றனர்.
---
Related Tags :
Next Story