நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு


நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 5 May 2022 7:30 PM IST (Updated: 5 May 2022 7:30 PM IST)
t-max-icont-min-icon

கீழையூர் அருகே 2 வீடுகளில் நகை-வெள்ளி பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வேளாங்கண்ணி:
கீழையூர் அருகே 2 வீடுகளில் நகை-வெள்ளி பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
வெள்ளி பொருட்கள் திருட்டு
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் மேலப்பிடாகை கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது69). இவரது மனைவி செல்வகுமாரி. மதிவாணனுக்கு கண் ஆபரேஷன் செய்வதற்காக கணவன்-மனைவி இருவரும்  திருவள்ளூர் சென்றிருந்தனர். 
இவர்கள் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கு இருந்த வெள்ளி குத்துவிளக்கு மற்றும் காமாட்சி விளக்கு ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.3000 ஆகும். 
மற்றொரு சம்பவம் 
இதேபோல் கீழையூர் போலீஸ் சரகம்  கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (55). இவரது வீட்டில் உள்ளவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டனர். 
இதனை அறிந்த மர்ம நபர்கள் வெற்றிவேல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த 13 கிராம் நகையை திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு  ரூ..13,000 ஆகும். 
இதுகுறித்த புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளில் நகை-வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story