ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை


ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 5 May 2022 7:45 PM IST (Updated: 5 May 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.

ஊட்டி

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.

தீ விபத்து

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், சவாலான சூழலில் இருந்து தப்பிப்பது குறித்தும் விளக்கமளிக்கும் வகையில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் உத்தரவின் பேரில் நிலைய அலுவலர்கள் பிரேமானந்தன், ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் அங்கிருந்த நர்சுகள் சிலர் தைரியமாக கலந்து கொண்டு தீயை அணைத்தனர்.

இதுகுறித்து நிலைய அலுவலர் பிரேமனந்தன் கூறியதாவது:-

செயல்விளக்கம்

ஆரம்ப கட்ட தீ விபத்தை தடுப்பதற்கு எல்லா இடங்களிலும் தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அவற்றை முறையாக பயன்படுத்த பெரும்பாலானோருக்கு தெரியாததால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ கட்டுக்கடங்காமல் பரவி விடுகிறது.

 எனவே தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அலுவலர் ரவி சங்கர், உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story