தீக்காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு


தீக்காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 5 May 2022 8:05 PM IST (Updated: 5 May 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசு விபத்தில் தீக்காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

திட்டச்சேரி:
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு தில்லையாடி நாகப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் விஜய் (வயது 23). கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி   இவர் ஆலத்தூர் நடுத்தெருவில் துக்க நிகழ்ச்சிக்கு பட்டாசு வெடிக்க வந்தார். அப்போது பட்டாசு வெடித்து கொண்டிருந்த போது, கையில் வைத்திருந்த கயிறில் உள்ள தீப்பொறி பட்டு மீதமுள்ள பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த விஜய்யை அக்கம்பக்கத்தினர் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை  அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் நேற்று  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story