தீத்தடுப்பு குறித்த செயல்விளக்கம்


தீத்தடுப்பு குறித்த செயல்விளக்கம்
x
தினத்தந்தி 5 May 2022 8:12 PM IST (Updated: 5 May 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

ஆவராணி ஊராட்சியில் தீத்தடுப்பு குறித்த செயல்விளக்கம்

சிக்கல்:
கீழ்வேளூர் அருகே ஆவராணி ஊராட்சியில்  தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு குறித்த செயல்விளக்கம் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சுப்பையா தலைமை தாங்கினார். கியாஸ் சிலிண்டரை எப்படி பயன்படுத்துவது, கியாஸ் சிலிண்டரில் இருந்து எரிவாயு வெளியேறினால் அதை எப்படி சரி செய்வது, தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி கையாளுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு  தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.  இதில் தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் ராஜராஜசோழன், ஊராட்சி தலைவர் சங்கீதா, ஒன்றிய கவுன்சிலர் மாலதி மற்றும் தீயணைப்பு வீரர்கள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story