கிராமமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


கிராமமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 5 May 2022 8:16 PM IST (Updated: 5 May 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

துளசியாப்பட்டினம் அவ்வையார் கோவிலுக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம் கிராமமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த துளசியாப்பட்டினம் பகுதியில் அவ்வையார் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.  நேற்றுமுன்தினம் சட்டசபையில் நடந்த அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு அருகே அமைந்துள்ள துளசியாப்பட்டினம் அவ்வையார் கோவிலுக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனை அறிந்ததும் நேற்று அவ்வையார் கோவில் முன்பு கிராமமக்கள் திரண்டு வந்து  சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து பொதுமக்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story