சாலை பாதுகாப்பு வாரவிழா மோட்டார்சைக்கிளில் போலீசார் ஊர்வலம்
திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி போலீசார் சார்பில் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி போலீசார் சார்பில் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான போலீசார் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் சப்-கலெக்டர் அலுவலக சாலை, பஸ்நிலையம், மெயின்ரோடு உள்பட முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது, ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story