மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரம்; தமிழகத்தை சேர்ந்தவரின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி


மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரம்; தமிழகத்தை சேர்ந்தவரின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி
x
தினத்தந்தி 5 May 2022 9:37 PM IST (Updated: 5 May 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்தவரின் மனு தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

பெங்களூரு: தமிழ்நாடு கோயம்புத்தூரை சேர்ந்தவர் சதீஷ். இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா பகுதியில் வசித்து வந்தார். சதீசுக்கு, அம்பிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக சதீசை, அம்பிகா பிரிந்து சென்றதாக தெரிகிறது.
மேலும் தனக்கு, சதீஷ் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட கோரி தொட்டபள்ளாப்புரா ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அம்பிகா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அம்பிகாவுக்கு ஜீவனாம்சம் வழங்க சதீசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் சதீஷ் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்பு நடந்தது. இந்த நிலையில் மனுவின் இறுதி விசாரணை நடந்த போது சதீஷ் சார்பில் ஆஜரான வக்கீல் தனது மனுதாரரை விட்டு அவரது மனைவி தான் பிரிந்து சென்றார் என்றும், பரஸ்பரமாக 2 பேரும் பேசி பிரியவில்லை என்றும் கூறினார். ஆனால் இதனை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் அம்பிகா தனது கணவர் மற்றும் மாமியாரின் கொடுமை தாங்காமல் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இதை பரஸ்பர சம்மதத்துடன் செல்வதாக அர்த்தப்படுத்த முடியாது என்று கூறி சதீசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story