நாற்றுப்பண்ணையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு முதல்கட்ட பணிகள்


நாற்றுப்பண்ணையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு முதல்கட்ட பணிகள்
x
தினத்தந்தி 5 May 2022 9:47 PM IST (Updated: 5 May 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

நாற்றுப்பண்ணையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு முதல்கட்ட பணிகள்

உடுமலை,
உடுமலை அருகே உள்ள போடிபட்டி ஊராட்சியில் செயல்பட்டுவரும் நாற்றுப்பண்ணையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாற்றுப்பண்ணை
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட போடிபட்டி ஊராட்சியில், ஊராட்சி அலுவலகத்தின் அருகில் நாற்றுப் (நாற்றங்கால்)பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணை வளாகத்தில் வேம்பு, புளி, கொய்யா, எலுமிச்சை, முருங்கை, அரசு, பூவரசு உள்ளிட்ட பல்வேறு விதைகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இவை துளிர்விட்டு வளர்ந்ததும் அவை மண் நிரப்பப்பட்ட, கெட்டியான கருப்புநிற பாலித்தீன் பைகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன.
இவ்வாறு வளர்க்கப்படும் நாற்றுக்கள் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் மூலம், இந்த ஒன்றியத்தில் உள்ள38 ஊராட்சிகளுக்கும், அந்தந்த ஊராட்சிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. அவை ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலையோரப்பகுதிகள், குளம், குட்டை,
ஓடை ஆகியவற்றின் கரைப்பகுதிஉள்ளிட்ட இடங்களில் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன.தற்போது போடிபட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள நாற்றுப்பண்ணையில் 15 ஆயிரம் நாற்றுக்கள் உள்ளன. இவை ஊராட்சி பகுதிகளுக்கு அனுப்புவதைத்தொடர்ந்து நாற்றுக்கள் அடுத்தடுத்துதொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகின்றன.
விரிவுபடுத்தும் திட்டம்
இந்த நிலையில் இந்த நாற்றுப்பண்ணையில் 50ஆயிரம் நாற்றுக்களைவளர்க்கும் வகையில் நாற்றுப்பண்ணையை விரிவு படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
இதற்காக போடிபட்டி ஊராட்சி பகுதியில் மடத்துக்குளம் எம்.எல்.ஏ.அலுவலகத்திற்கு எதிரே உள்ள காலி இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு முதல்கட்டமாக அந்த இடத்தை சுத்தம் செய்து சுற்றிலும் வேலி அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது. இந்த பணிகள் மற்றும் தற்போது செயல்பட்டு வரும் நாற்றுப்பண்ணையில் நடைபெற்று வரும் பணிகளை ஊராட்சி தலைவர் டி.சவுந்தரராஜன் பார்வையிட்டார். அப்போது ஊராட்சி செயலாளர் எல்.விஜயக்குமார் உடனிருந்தார்.

Next Story