திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கொள்முதல் நிலைய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க சிறு, குறு விவசாயிகள் பாசன சங்கத்தின் தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் விவசாய சங்க நிர்வாகிகள் முருகானந்தம், பாண்டுரங்கன், வீரராஜன், முருகேசன், சின்னஏட்டு, அனிதா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story