சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்


சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2022 10:19 PM IST (Updated: 5 May 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்

அனுப்பர்பாளையம்:
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் குடோன்களில் மதுபான பாட்டில்களை வாகனங்களில் ஏற்றும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு பெட்டி ஒன்றுக்கு ரூ.3.50 வீதம் ஒரே மாதிரி கூலி நிர்ணயம் செய்ய வலியுறுத்தி திருப்பூர், காங்கேயத்தில் சி.ஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் குடோனில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால், சங்கச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். ஒரே மாதிரி கூலி நிர்ணயம் செய்வதுடன், ஏற்றுக் கூலியை மாதக்கணக்கில் பாக்கி வைக்காமல் தினசரி வழங்க வேண்டும், அனைத்து குடோன்களிலும் மதுபான பாட்டில்களை ஏற்றி, இறக்க டிராலி தள்ளுவண்டி வழங்க வேண்டும், டிரான்ஸ்போர்ட் காண்ட்ராக்ட்டர்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்ற டாஸ்மாக் நிர்வாகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் டாஸ்மாக் சுமைப்பணியில் ஈடுபடும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முழுமையாக கலந்து கொண்டனர்.

Next Story