விஷம் சாப்பிட்டு இளம்பெண் சாவு


விஷம் சாப்பிட்டு இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 5 May 2022 10:19 PM IST (Updated: 5 May 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே விஷம் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்:-
ஒசூர் தர்கா அருகே உள்ள மாருதி நகரை சேர்ந்தவர் வினிதா (வயது23). இவர், கடந்த கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரேம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வினிதா, பிரேமை பிரிந்து வாழ்ந்தார். பின்னர் சந்தோஷ்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சந்தோஷ்குமாருக்கும், வினிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 
இதில் மனம் உடைந்த வினிதா விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வினிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story