சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டுவிழா


சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டுவிழா
x
தினத்தந்தி 5 May 2022 10:22 PM IST (Updated: 5 May 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1997-ம் ஆண்டு போலீஸ் துறையில் போலீஸ்காரராக பணியாற்றி 25 ஆண்டுகள் நிறைவு செய்த 91 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களுக்கு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கலந்து கொண்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களை தனித்தனியாக அழைத்து பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், போலீஸ் துறையில் 25 ஆண்டுகளாக எந்தவித தண்டனையும் பெறாமல் பணியாற்றி, பதவி உயர்வு பெற்று இருக்கிறீர்கள். அதைவிட இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கை பேணுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும், என்றார்.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சேர்ந்து, போலீஸ் சூப்பிரண்டுக்கு நினைவு பரிசு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story