ஏர்வாடி இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
ஏர்வாடி இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கஜேந்திரன். இவர் மனு அளிக்க வந்த பெண் ஒருவரிடம் செல்போன் எண்ணை வாங்கி தவறான நோக்கத்துடன பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பெண் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் அளித்தாராம். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரனை ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார். இந்த புகார் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story