விஷம் குடித்து பொக்லைன் டிரைவர் தற்கொலை


விஷம் குடித்து பொக்லைன் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2022 10:27 PM IST (Updated: 5 May 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே விஷம் குடித்து பொக்லைன் டிரைவர் தற்கொலை

வேட்டவலம்

வேட்டவலம் அருகே செல்லங்குப்பம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 24), பொக்லைன் டிரைவர். 

இவருக்கு சுபாஷினி என்ற மனைவியும், ஒரு வயதில் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். 

விக்னேஷ் அடிக்கடி உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த மாதம் வேட்டவலம் அருகே அரும்பாக்கத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மீ்ண்டும் உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

  உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக  உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தாய் கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story