டாஸ்மாக் கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகே கனந்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் குடோன் உள்ளது.
இந்த குடோனில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடோன் முன்பு சங்க கிளைத்தலைவர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் ஒரே மாதிரியாக ஏற்றுக்கூலி ஒரு பெட்டிக்கு ரூ.350 வழங்க வேண்டும். கூலி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். தினமும் கூலி வழங்க வேண்டும்.
சென்னை அம்பத்தூர் குடோனில் வழங்கி உள்ளது போல் சுமைப்பணி தொழிலாளர்கள் மதுபான பெட்டிகளை லாரிகளில் ஏற்றி இறக்க வசதியாக அனைத்து குடோன்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் டிராலி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story