நவகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
புவனகிரி அருகே நவகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
புவனகிரி,
புவனகிரி அருகே புளியங்குடி கிராமத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நவ காளியம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் புளியங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story