30 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


30 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 5 May 2022 10:54 PM IST (Updated: 5 May 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

தர்மபுரி:-
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கடந்த 1989-1992-ம் ஆண்டு வணிகவியல் பாட பிரிவில் படித்த மாணவ- மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி தர்மபுரி அரசு கலை கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். 30 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் கல்லூரியில் படித்த நாட்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் கல்லூரி முதல்வர் அன்பரசன், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் இளங்கோவன், முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். அவர்களை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர்.

Next Story