பரமக்குடி நபரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி
தொழில் தொடங்க கடன் தருவதாக பிரபல நிதிநிறுவனத்தின் பெயரை கூறி பரமக்குடி நபரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
தொழில் தொடங்க கடன் தருவதாக பிரபல நிதிநிறுவனத்தின் பெயரை கூறி பரமக்குடி நபரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
எலக்ட்ரீசியன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஜி.வி.பந்த் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் என்பவரின் மகன் கண்ணன் (வயது45). இவர் கடந்த 2008 முதல் 2020-ம் ஆண்டு வரை மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக வேலை இழந்து ஊருக்கு வந்துவிட்டார்.
இந்தநிலையில் கண்ணன் கடன் வாங்கி தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இணையதளத்தில் உள்ள லோன் செயலியில் தனது செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி அவரது எண்ணிற்கு அழைத்த பெண் ஒருவர் மும்பையில் இருந்து பேசுவதாக கூறி முப்பையின் பிரபல நிதிநிறுவன பெயரை சொல்லி லோன் வழங்குவதாக இந்தி மொழியில் பேசி உள்ளார்.
கடன்
அதன் விவரங்களை கேட்ட கண்ணன் வேலை இழந்து தவித்து வரும் தனக்கு இந்த லோன் கிடைத்தால் சுயதொழில் தொடங்கலாம் என்று கருதி தனது மனைவி விஜயலெட்சுமி பெயரில் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த நிறுவன பெயரில் தொழில் தொடங்க ரூ.45 லட்சம் கடன் வழங்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண் பான்கார்டு, ஆதார்கார்டு, வங்கி விவரம் ஆகியவற்றை பெற்றுள்ளார். இதன்பின்னர் பல்வேறு காரணங்களை கூறி கண்ணனிடம் பணம் அனுப்பும்படி கூறியுள்ளனர்.
அவரும் லோன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தெரிவித்தபடி பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 290 பணத்தினை அனுப்பி உள்ளார். இதன்பின்னரும் லோன் தராமல் அந்த பெண் மீண்டும் தொடர்பு கொண்டு கடன் தொகையினை வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்ப முடியாது பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிவரைவோலையாக எடுத்துள்ளதாக அதன் நகலை காட்டி அதனை அனுப்ப ரூ.42 ஆயிரத்து 550 பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். வரைவோலை நகலை பார்த்த கண்ணன் நம்பிக்கை அடைந்து அந்த பணத்தினை பெற நினைத்துள்ளார்.
அதிர்ச்சி
இருப்பினும் தொடர்ந்து பணம் கேட்பதால் சந்தேகம் அடைந்து இதுகுறித்து விசாரித்தபோது அவர்கள் போலி ஆசாமிகள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பிரபல நிதி நிறுவன பெயரில் கடன் விவரங்களை கள்ளத்தனமாக பெற்று இதுபோன்று மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தினை திரும்ப பெற்றுத்தருமாறு சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story