இளைஞர்களுக்கான கலை போட்டிகள்
இளைஞர்களுக்கான கலை போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.
மாவட்ட போட்டியில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் பங்கு பெற விரும்பும் இளைஞர்கள் வருகிற 10-ந் தேதிக்குள் மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சீபுரம் -631502 என்ற முகவரிக்கு தங்களது பெயர், பிறந்தநாள், முகவரி, செல்போன் எண், பங்குபெற விரும்பும் கலைப்பிரிவு ஆகிய விவரங்களை அனுப்பலாம்.
9150085001 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப்பிலும் அனுப்பலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story