கச்சிராயப்பாளையம் அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை
கச்சிராயப்பாளையம் அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் மகள் ஆர்த்தி (வயது 17). இவர் அதே ஊரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளியில் நடந்த செய்முறை தேர்வில் ஆர்த்தி குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் மாணவியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதைபார்த்து அதிர்ச்சியைடந்த பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story