கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2022 11:05 PM IST (Updated: 5 May 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்யக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை  தடை செய்யக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
 விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் பாதுகாத்திட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். 
ஊர்வலம்
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.  இதில் நிர்வாகிகள் ஸ்டாலின், துரைராஜ், மாரியப்பன், சிங்காரவேலன், துரைக்கண்ணு, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக காமராஜர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கண்ணாரத்தெரு, சின்னக்கடை வீதி வழியாக கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பியவாறு வந்தனர்.

Next Story