குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்


குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
x
தினத்தந்தி 5 May 2022 11:08 PM IST (Updated: 5 May 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

குத்தாலம்:
குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் குத்தாலம் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு பெற்ற இக்கோவிலில் கடந்த 1960-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இந்தநிலையில் கடந்த  62 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம்  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளால் சாமி விமானம், அம்பாள் விமானம், திருமாளிகைப்பத்தி முன்மண்டபம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு வருகிற 8-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை  7 மணிக்கு மேல் 8 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. 
விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. முதல் கால யாக பூஜை மற்றும் பூர்ணாஹுதி தீபாராதனை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கொண்டு சாமி  தரிசனம் செய்தனர்

Next Story