வணிகர் சங்க மாநாடு: நாமக்கல், மோகனூரில் கடைகள் அடைப்பு
வணிகர் சங்க மாநாடு: நாமக்கல், மோகனூரில் கடைகள் அடைப்பு
நாமக்கல்:
வணிகர் சங்க மாநாட்டையொட்டி நாமக்கல், மோகனூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
கடைகள் அடைப்பு
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் வணிகர் விடியல் மாநாடு நடத்தப்பட்டது. இதில் கடைகளை அடைத்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என பேரமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று நாமக்கல் நகரில் ஜவுளிக்கடை, நகைக்கடை என பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடைவீதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்ததால், எப்போது பரபரப்பாக காணப்படும் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கடைகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மாணவர்கள் அவதி
வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர்கள் மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோகனூர் வணிகர்கள் சங்கம் சார்பில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தன.
அதன்படி மோகனூரில் உள்ள வணிக வளாகங்கள், மளிகை கடைகள், எலக்ட்ரிக்கல், உணவகங்கள், டீக்கடை என பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. பிளஸ்-2 தேர்வு தொடங்கி உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story