பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு


பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 May 2022 12:30 AM IST (Updated: 5 May 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கொரடாச்சேரி:-

கொரடாச்சேரி அருகே அம்மையப்பனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சிதம்பரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 12,905 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு கண்காணிப்பு பணியில் 60 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், தாசில்தார் நக்கீரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story