பிளஸ்-2 தேர்வை 23,183 மாணவ, மாணவிகள் எழுதினர்
பிளஸ்-2 பொதுத்தேர்வை 23 ஆயிரத்து 183 மாணவ, மாணவிகள் எழுதினர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 23 ஆயிரத்து 183 மாணவ, மாணவிகள் எழுதினர். கலெக்டர் மேகநாதரெட்டி தேர்வு மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பிளஸ்-2 தேர்வு
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு 98 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 10 ஆயிரத்து 888 மாணவர்களும், 12 ஆயிரத்து 295 மாணவிகளும் எழுதினர். மொத்தம் 23 ஆயிரத்து 183 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். 325 தனித்தேர்வர்களும், 52 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினர். 1,596 பேர் தேர்வு பணிகளில் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு மையத்தை நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லி, விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, அருப்புக்கோட்டைஎஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
தேர்வை முன்னிட்டு மாணவ, மாணவிகள் முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வந்தனர். மேலும் தேர்வுக்கு முன்னதாக தேர்வை சிறப்பாக எழுத வேண்டி மாணவ, மாணவிகள் பிரார்த்தனை செய்தனர். அதன்பின்னரே அனைவரும் தேர்வு எழுத சென்றனர்.
Related Tags :
Next Story