ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயம்
அரக்கோணம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னமோசூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரெயிலில் வந்தார். அரக்கோணம் அருகே திருவலங்காடு ரெயில் நிலையத்தை கடந்து அங்குள்ள ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அஜித்குமார் மோசூர் ரெயில் நிலையத்தில் இறங்குவதற்காக ரெயிலின் படி அருகே வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story