அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு


அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 May 2022 11:39 PM IST (Updated: 5 May 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது புறநோயாளிகள் எத்தனை பேர் வருகின்றனர் என்பது குறித்து பதிவேடுகளை பார்வையிட்டார். அவசர சிகிச்சை பிரிவில் எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதனையும் நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் தீ தடுப்பு நடவடிக்கை குறித்து டாக்டருக்கு ஆலோசனை வழங்கி, தீ தடுப்பு உபகரணங்கள் சரியாக வைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது நாட்டறம்பள்ளி அரசு தலைமை மருத்துவர் எஸ்.திலீபன் மற்றும் அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story