மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2022 11:41 PM IST (Updated: 5 May 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காஞ்சனா (39). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் அவர்களுக்கு இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. 
இதனால் மனமுடைந்த காஞ்சனா கணவரிடம் கோபித்து கொண்டு பாலப்பட்டி அருகே எல்லைக்காட்டூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2 மாதமாக கோபித்து கொண்டு சென்ற மனைவி திரும்பி வராததால் மனமுடைந்த நிலையில் இருந்த சரவணன் நேற்று காலை குச்சிபாளையம் காவிரி ஆற்றங்கரையில் குட்டுக்காட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற பரமத்திவேலூர் போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story