கல்வி விடுதிகளில் துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கல்வி விடுதிகளில் துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 May 2022 11:58 PM IST (Updated: 5 May 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

கல்வி விடுதிகளில் துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்
அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 10 பகுதி நேர துப்புரவாளர் (ஆண்) மாதம் ரூ.3 ஆயிரம் என்ற தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் பகுதி நேர துப்புரவாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் மாதிரி விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்தும், உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி, அதனை அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகம் முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story