நகர தி.மு.க. செயலாளராக டேனியல் ராஜ் மீண்டும் தேர்வு
உளுந்தூர்பேட்டையில் நகர தி.மு.க. செயலாளராக டேனியல் ராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை நகர நிர்வாகிகளுக்கான தேர்தல் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நகர செயலாளர் பதவிக்கு தற்போதைய நகர செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான டேனியல் ராஜ் மீண்டும் போட்டியிடுவதற்காக வேட்பு மனு அளித்தார்.
அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாத நிலையில் உளுந்தூர்பேட்டை தி.மு.க. நகர செயலாளராக டேனியல் ராஜ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நகர செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டேனியல் ராஜ் கட்சி நிர்வாகிகளுடன் உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து நகர செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டேனியல் ராஜூக்கு உளுந்தூர்பேட்டை நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story