பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் கைது
பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சோலைவிக்னேஷ் (வயது 26) என்ற தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்தார். இந்த வெடி விபத்து குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர்களான சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த பெரியகருப்பன், இவரது மகன்கள் ராமச்சந்திரன், சிதம்பரம், மணிகண்டன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிதம்பரத்தை (வயது 30) போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story