அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது
அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா எம்.நாகலாபுரம் வைப்பாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக இருக்கன்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது வைப்பாற்று பகுதியில் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்்திரம் மூலம் மணல் அள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி மணல் அள்ளியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில், நாராயணபுரத்தை சேர்ந்த தங்கமுனியசாமி (வயது 32), மேலச்சிறுக்குளத்தை சேர்ந்த முத்தையா (20), முடித்தலை பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (27), குணசேகரன் (29), மீனாட்சிபுரத்தை சேர்ந்த வேல்முருகன் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story