அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு
ஆலங்காயம், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி
ஆலங்காயம், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
ஆலங்காயம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆணைக்கிணங்க, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டி.ஆர்.செந்தில் வழிகாட்டுதலின்படி 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக கொடுக்கப்பட்டது.
ஆலங்காயம் அரசு மருத்துவமனையில் இந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி, மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து ஆலங்காயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு மையத்துக்கு கலெக்டர் நேரில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார்.
நாட்டறம்பள்ளி
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். அப்போது புறநோயாளிகள் எத்தனை பேர் வருகின்றனர் என்பது குறித்து பதிவேடுகளை பார்வையிட்டார். அவசர சிகிச்சை பிரிவில் எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதனையும் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
மேலும் தீ தடுப்பு நடவடிக்கை குறித்து டாக்டருக்கு ஆலோசனை வழங்கி, தீ தடுப்பு உபகரணங்கள் சரியாக வைக்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டார். ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு தலைமை மருத்துவர் எஸ்.திலீபன் மற்றும் அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story