இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் தாயகம் திரும்பினர் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் தாயகம் திரும்பினர். உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.
கோட்டைப்பட்டினம்:
3 மீனவர்கள் விடுதலை
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசுவலிங்கம் (வயது 50), சக்திவேல் (38), கலைமாறன் (29) ஆகிய 3 பேர் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் 3 பேரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி வழக்கை விசாரித்த நீதிபதி 3 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
ஜெகதாப்பட்டினத்திற்கு வந்தனர்
அதனடிப்படையில் மீனவர்கள் நேற்று இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். இதையடுத்து 3 பேரையும் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் மீனவர்கள் 3 பேரும் சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் ஜெகதாப்பட்டினத்திற்கு வந்த 3 மீனவர்களையும் அவர்களது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
Related Tags :
Next Story