அரசு பள்ளி ஆண்டு விழா
அரசு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
அன்னவாசல்:
அன்னவாசல் ஒன்றியம், மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 68-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியை கிறிஸ்டி வரவேற்று பேசினார். இடைநிலை ஆசிரியர் ஆயிஷா சித்திக்கா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். இதைதொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக புதியதாக முதல் வகுப்பில் சேர உள்ள மாணவர்கள் மாலை அணிவித்து பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதில் இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் மணிமொழி, பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி, அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர்அலெக்ஸாண்டர், அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரோஸ்மேரி சகாயராணி, ஆசிரியர் பயிற்றுநர் வைரமுத்து, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story