கந்தர்வகோட்டை அருகே ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் குளத்தில் மூழ்கி சாவு


கந்தர்வகோட்டை அருகே  ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் குளத்தில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 6 May 2022 12:41 AM IST (Updated: 6 May 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை அருகே ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் குளத்தில் மூழ்கி பலியானார்.

கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே புதுகை மெயின் ரோட்டில் உள்ள எம்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சையன் (வயது 67). ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் அருகில் உள்ள செட்டிகுளத்தில் மதுபோதையில் குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கினார். 2 தினங்களுக்கு பின் இறந்த நிலையில் உடல் குளத்தில் மிதந்தது. இதையறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிச்சையன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story