அண்டக்குளத்தில் விவசாயிகள் சாலை மறியல்


அண்டக்குளத்தில் விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 May 2022 12:47 AM IST (Updated: 6 May 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீரனூர், மே:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அண்டக்குளம் பகுதியில் தொடர்ந்து பழுதாகும் மின்மாற்றிகளால் மின்சார தடை ஏற்பட்டு பயிர்கள் நீரின்றி கருகுவதாகவும், 5 முறை செலவு செய்தும் மின்மாற்றி பழுது நீக்கியும் பலன் இல்லை என கூறி கருகிய பயிர்களுடன் விவசாயிகள், புதுக்கோட்டை-செங்கிப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சீரான மின்சாரம் கிடைக்க செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story