மாரியம்மன் கோவிலில் கரக உற்சவம்


மாரியம்மன் கோவிலில் கரக உற்சவம்
x
தினத்தந்தி 6 May 2022 1:34 AM IST (Updated: 6 May 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கரக உற்சவம் நடந்தது

கும்பகோணம்
 கும்பகோணம் முக்கண்ணர் ஆச்சாரியார் தெருவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கரக உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 3-ந் தேதி அரசலாற்றங்கரை படித்துறையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்று இரவு 9 மணிக்கு கரகம், வேல், அக்னி சட்டி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை முக்கண்ணர் ஆச்சாரியார் தெருமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story