சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வளர்ப்பு தந்தை கைது
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த 33 வயதான வாலிபருக்கும், கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 12 வயதில் 6-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். பின்னர் அந்த பெண், அந்த வாலிபரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிைலயில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமிக்கு வளர்ப்பு தந்தையான அந்த வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது தாய் மற்றும் பாட்டியிடம் கூறி கதறி அழுதார். உடனே அவர்கள் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தந்தையான அந்த வாலிபரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story