வாலிபர் தற்கொலை
தஞ்சையில் விஷம் தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
தஞ்சாவூர்
தஞ்சை மானம்புச்சாவடி உக்கடையம்மாள் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) தின்று விட்டு மயங்கி கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கார்த்தியின் தாய் மனோரஞ்சிதம் அளித்த புகாரின்பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story