கர்நாடகத்தில் தமிழர் பொன்னுராஜ் உள்பட 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்


கர்நாடகத்தில் தமிழர் பொன்னுராஜ் உள்பட 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 6 May 2022 3:15 AM IST (Updated: 6 May 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனராக துஷார் கிரிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனராக துஷார் கிரிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகராட்சி தலைமை கமிஷனர்

கர்நாடக அரசு 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து ேநற்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா உள்கட்டமைப்புகள் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனராக துஷார் கிரிநாத் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் வருவாய்த்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அனில்குமாருக்கு கூடுதலாக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரியின் செயலாளர் பொன்னுராஜ் அரசு பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவர் கர்நாடக மின்சார கழக நிறுவன நிர்வாக இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிப்பார்.

தார்வார் கலெக்டர்

காத்திருப்போர் பட்டியலில் உள்ள மனோஸ் ஜெயின் தொழிலாளர் நலத்துறை செயலாளராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் குஷ்பு சவுத்திரி டெல்லியில் உள்ள கர்நாடக பவன் துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாகல்கோட்டை கலெக்டர் ராஜேந்திரா கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராகவும், பெலகாவி மாவட்ட கலெக்டர் ஹிரேமத் கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராகவும், தார்வார் மாவட்ட கலெக்டர் நித்திஷ் பட்டீல் பெலகாவி மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக கைத்தறி மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் குருதத்த ஹெக்டே தார்வார் மாவட்ட கலெக்டராகவும், உடுப்பி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி நவீன்பட் கே.எஸ்.ஆர்.டி.சி. இயக்குனராகவும், பாகல்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி பூபாலனுக்கு கூடுதலாக அதே மாவட்ட கலெக்டர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கொள்ளேகால் உதவி கலெக்டர்

கலபுரகி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி திலீஸ் சசி, நிர்வாக சீர்திருத்தத்துறையில் மின் ஆளுமை துறையின் மின்னணு வினியோக மக்கள் சேவை இயக்குனராகவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பரத், வடமேற்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ஷில்பா கர்நாடக நகர உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதி கழக இணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

டெல்லியில் உள்ள கர்நாடக பவன் துணை கமிஷனர் உடுப்பி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும், கொள்ளேகால் உதவி கலெக்டர் கிரிஸ் திலிப் படோலே கலபுரகி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் பொன்னுராஜ் என்பவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story