ஓமலூர் அருகே கிணற்றில் குளித்த செங்கல் சூளை உரிமையாளர் பலி
ஓமலூர் அருகே கிணற்றில் குளித்த செங்கல் சூளை உரிமையாளர் பலியானார்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே எம்.செட்டிபட்டி பாப்பான் காட்டூர் ஆசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் வைரவேல் (வயது 43). செங்கல் சூளை நடத்தி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் குடிபோதையில் அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிப்பதற்காக குதித்துள்ளார். 2 முறை மேலே வந்தவர் பின்னர் தண்ணீரில் மூழ்கியதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். இது குறித்து ஓமலூர் தீயணைப்பு துறை மற்றும் தொளசம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, 30 நிமிடங்கள் போராடி கிணற்றில் குளித்த வைரவேலை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story