ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள்


ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள்
x
தினத்தந்தி 6 May 2022 3:59 AM IST (Updated: 6 May 2022 3:59 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சூரமங்கலம்:
ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதன்படி  கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) கேரள மாநிலம் கொச்சுவேலி ரெயில் நிலையத்திலிருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்பட்டு நாளைமறுநாள் காலை 9.52 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு தாம்பரம் சென்றடையும்,
இதேபோல் மறுமார்க்கத்தில் தாம்பரம்- கொச்சுவேலி சிறப்பு ரெயில் (06043) தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து வருகிற 10-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 11.50 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 11.53 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்,
மேலும் மங்களூர் சென்ட்ரல்- பெலகாவி சிறப்பு ரெயில் (06042) கர்நாடக மாநிலம் மங்களூர் ரெயில் நிலையத்திலிருந்து நாளை இரவு 11 மணிக்கு புறப்பட்டு நாளைமறுநாள் காலை 9.17 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 9.20 மணிக்கு புறப்பட்டு 9-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கர்நாடக மாநிலம் பெலகாவி சென்றடையும்,
இதேபோல் மறுமார்க்கத்தில் பெலகாவி- மங்களூர் சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06041) பெலகாவி ரெயில் நிலையத்திலிருந்து வருகிற 9-ந் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் 10-ந் தேதி மதியம் 12.40 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 12.42 மணிக்கு புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு மங்களூர் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடையும், 
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story