முத்துநாயக்கன்பட்டியில் எருதாட்டம்


முத்துநாயக்கன்பட்டியில் எருதாட்டம்
x
தினத்தந்தி 6 May 2022 4:15 AM IST (Updated: 6 May 2022 4:15 AM IST)
t-max-icont-min-icon

முத்துநாயக்கன்பட்டியில் எருதாட்டம் நடந்தது.

ஓமலூர்:
ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் ஸ்ரீமுத்து முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி  காலையில் சக்தி கரகம், முளைப்பாலிகை, தீர்த்த குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் காலை 7 மணிக்கு முனியப்பன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. காலை 8.30 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், கெடா வெட்டுதலும், பின்னர் மாலை 4 மணிக்கு எருதாட்டம் நடைபெற்றது. 5-க்கும் மேற்பட்ட எருதுகள் சாமி  முன்பு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவிலை சுற்றி எருதாட்டி அழைத்து சென்றனர். தொடர்ந்து மாலை 7 மணிக்கு வாணவேடிக்கை நடந்தது.

Next Story