மரம், மின்கம்பங்கள் சாய்ந்தன


மரம், மின்கம்பங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 6 May 2022 4:56 AM IST (Updated: 6 May 2022 4:56 AM IST)
t-max-icont-min-icon

பலத்த மழையால் மரம், மின்கம்பங்கள் சாய்ந்தன.

சோமரசம்பேட்டை:
சோமரசம்பேட்டை பகுதியில் இனியானூர், அல்லித்துறை, கீழவயலூர், நாச்சிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. அவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தபுரம் ஆர்.எஸ்.எஸ். காலனியில் புங்கனூர்- அல்லித்துறை மெயின் ரோட்டில் மின்கம்பம் ஒன்று சாய்ந்து கிடந்தது. அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற ஊராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இனியானூர் கிராமத்தில் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் உள்ள குழுமாயி அம்மன் கோவில் அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தின் ஒரு பகுதி வேருடன் சாய்ந்தது. மல்லியம்பத்து ஊராட்சியில் வீட்டின் மாடியில் மேற்கூரையாக போடப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட் பறந்துவந்து மின்மாற்றியில் விழுந்தது. அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related Tags :
Next Story