ராமானுஜரின் 1,005-வது திருநட்சத்திர பெருவிழா


ராமானுஜரின் 1,005-வது திருநட்சத்திர பெருவிழா
x
தினத்தந்தி 6 May 2022 4:56 AM IST (Updated: 6 May 2022 4:56 AM IST)
t-max-icont-min-icon

ராமானுஜரின் 1,005-வது திருநட்சத்திர பெருவிழா நடந்தது.

ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உடையவர் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1,005-வது திருநட்சத்திர பெருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. ராமானுஜரின் 1,005-வது திருநட்சத்திர தினமான நேற்று காலை 4 சித்திரை வீதிகளில் உற்சவர் ராமானுஜர் உலா வந்தார். பின்னர் ராமானுஜர் சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுளினார். மதியம் 1 மணியளவில் பெருமாளிடம் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள் மற்றும் மாலைகளால் ராமானுஜருக்கு உச்சாத்து அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோஷ்டி நடைபெற்றது. மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(வெள்ளிக்கிழமை) இயற்பாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story