கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் கலந்தாய்வு கூட்டம்


கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 6 May 2022 4:56 AM IST (Updated: 6 May 2022 4:56 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

திருச்சி:
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. செந்தாமரைக்கண்ணன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி, தஞ்சை சரக டி.ஐ.ஜி.க்கள் சரவணசுந்தர், கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டு, தங்களது மாவட்ட குற்ற சம்பவ புள்ளி விவரங்கள் பற்றி தெரிவித்தனர். மேலும், கூட்டத்தில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கலந்து கொண்டார். இதில் போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் காவல்துறையினர் அணுகும் முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கைதிகளிடம் விசாரணை, சைபர் குற்றங்கள், இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. அறிவுரை வழங்கினார்.

Next Story