என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2022 9:16 AM IST (Updated: 6 May 2022 9:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டாங்கொளத்தூரில் என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் அகர்வால் (வயது 21). இவர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று காலை உடல்நிலை சரியில்லை என்று நண்பர்களிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரியின் விடுதியில் இருந்துள்ளார். கல்லூரி முடிந்து சக மாணவர்கள் அறைக்கு திரும்பியபோது அறையின் கதவு உள் தாழ்ப்பாள் போட்டு இருந்தது. 

சந்தேகமடைந்த சக மாணவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது சங்கர் அகர்வால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர் சங்கர் அகர்வாலின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story